2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாடளாவிய சுற்றிவளைப்பு ;ஒரே நாளில் 618 பேர் கைது

Simrith   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.

இலங்கையில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 24,708 பேர் மீது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட குழுவில் குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 19 நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 203 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 174 நபர்களும் அடங்குவர். 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 72 பேரை பொலிஸார் கைது செய்தனர், அதே நேரத்தில் 13 பேர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், 3680 பேர் மீது பிற போக்குவரத்து குற்றங்களுக்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .