2026 மார்ச் 19, வியாழக்கிழமை

நயன்தாரா தான் வேணும்: ஒற்றைக்காலில் நிற்கிறார்

S.Renuka   / 2026 மார்ச் 19 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எனக்கு நயன்தாரா வேண்டும் என்று சி.வி.சண்முகம் கொச்சையாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக அரசை கண்டித்து அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.


ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்கிறார். கனவை சொன்னால் இவர் அதை நிறைவேற்றுவாராம். ஆம் எனக்கு நயன்தாரா வேண்டும். இவர் கனவை நிறைவேற்றுவாரா. நயன்தாராவை திருமணம் செய்து வையுங்கள் என யாராவது கேட்பார்கள். இவர் கனவை நிறைவேற்றிவிடுவாரா. ஆட்சியே போய் விட்டது.

ஆட்சி போன பிறகு வந்து கனவை நிறைவேற்றுவேன் என்கிறார். கடந்த 5 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என தெரியவில்லை என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் சி.வி சண்முகம் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதற்கு பெண்ணிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X