2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

நெல்லியடியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Editorial   / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கபிலன் செல்வநாயகம் 

அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கரணவாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத விற்பனைக்காகத் தன்வசம் வைத்திருந்த 'Pregabalin' எனப்படும் 520 போதை மாத்திரைகள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார், அவரை நாளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .