2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு 'இரகசிய உளவாளிகள் சதி'

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

“ஒன்றிணைந்த எதிரணியுடன் இரகசியமாகத் தொடர்புகளைப் பேணி வருகின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நாசவேலைகளைச் செய்து வருகின்றனர்” என்று, ஐக்கிய தேசியக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி பண்டார ஜயமஹா, “அரசாங்கத்திலுள்ள சில உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும், அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை பல மாகாணங்களில் தோற்கடித்தமை போன்றவற்றை வைத்தே, இத​னைக் கணிப்பிட முடியும்” என்று கூறினார்.

“மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் எவரும், இந்தப் பணியில் ஈடுபடவில்லை. ஆனால், இணைந்த எதிரணியுடன் இரகசியமான முறையில் தொடர்பை பேணி வரும் சு.க அங்கத்தவர்கள் இதனைச் செய்கின்றனர்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு கவனமாகவும் இருக்க வேண்டும். இது குறித்து தெளிவூட்டுவதற்கு, ஐ.தே.க வின் உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்துள்ளனர்.

மேலும், அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மத்திய அரசாங்த்தால் அதனை செயல்படுத்த முடியும். அதேநேரம், ஜனாதிபதியோ மற்றையவர்களோ, இந்தச் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டுவரவும் முடியும். அந்தத் திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடி அதனை செயல்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .