2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்ற சொத்துகளின் இழப்பீடு குறித்த மதிப்பீடு ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குழப்ப நிலைமைகளின் போது, சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, பல மைக்ரோபோன்களும் கதிரைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த மைக்ரோபோன்களை வழங்கிய நிறுவனங்களிடம் நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்து மைக்ரோபோன்கள் சேதம் குறித்து  ஆராயுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முழு நாடாளுமன்றத்துக்கான காப்புறுதி 8 பில்லியன் ரூபாய் என்றும், குறித்த சேதங்கள் குறித்து மதிப்பிட காப்புறுதி பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய குறித்த பிரதிநிதிகள் நாளைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகைத்தரவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .