S.Renuka / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (27) அன்று பாராளுமன்ற கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும், 2016 மற்றும் 2018ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்களும், 2024ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த கால குற்றங்கள் குறித்த தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் இதேபோன்ற நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
31 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago