2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிப்பு

Editorial   / 2020 மே 08 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 இலட்சத்தை தாண்டியுள்ளது.

3,916,337 பேர் பாதிக்கப்பட்டுள்ள  அதேவேளை, 270,711 பேர் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.  

பாரிய உயிரிழப்புகளை சந்தித்துவரும் நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 76,928 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக உயிரிழப்புகள் பதிவாகிவரும் நாடுகளின் தரவரிசையில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றினால் 1,889 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள்  ஈடுபட்டு வருகின்றனர்.  கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X