Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
இடமாற்றப்பட்டுள்ள நிஷாந்த சில்வா குற்றப்புலனாய்வு பிரிவின் திறமையான அதிகாரியொருவர். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட அதிகாரியெனத் தெரிவித்துள்ள ஹிருணிகா தற்போது சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழேயே இருப்பதால் இந்த இடமாற்றம் கண்டிப்பாக ஜனாதிபதியின் ஆணைக்கமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழேயே நடைபெற்றனவென்றும் அவரால் அதன் பொறுப்புகளை வேறொருவரிடம் திணிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுபல சேனா அமைப்பின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு தெரியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் இவரிடம் இருக்கும் பழக்கம் தான் பந்தை மற்றையவரிடம் மாற்றுவது ஆனால் ஜனாதிபதியால் இப்போது அதனைச் செய்ய முடியாது காரணம் ஜனாதிபதியின் பொறுப்பிலேயே பொலிஸ் இயங்குகின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
20 minute ago