Janu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ கட்டுபத மஹாவெவயில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, இலக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 08 வயதுடைய தினேத் சத்சர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
தாயின் சகோதரியும், அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் மற்றுமொரு அயலவர் ஆகியோருடன் நீராடுவதற்காக சென்ற போதே குறித்த மாணவன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் , இந்த சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago