Editorial / 2020 ஜூன் 13 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் இன்று(13) பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை நடைபெற்றது.
இதற்கமைய, நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள சாந்த செபஸ்த்தியன் கல்லூரியிலும் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
கம்பஹா மாவட்ட செயலாளர்; சுனில் ஜயலத், நீர்கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இந்த ஒத்திகை நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பரிய, தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை நடைபெற்ற சாந்த செபஸ்த்தியன் கல்;லூரிக்கு வருகைதந்து, தேர்தல் நடைபெறுவதை பார்வையிட்டு அதிகரிரகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
கொவிட்19 பரவலுக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி , வாக்களிப்பில் எவ்வாறு கலந்து கொள்வது என்பது குறித்து தெளிவூட்டும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்தல் ஒத்திகை நடைபெற்றது. 200 பேர் வரையான வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படடிருந்தனர்.
கம்பஹா மாவட்டத்திலேயே, அதிக எண்ணிக்கையான வாக்காளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது
6 minute ago
21 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
30 minute ago
38 minute ago