2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நீர் வெறுப்பு நோயால் 15 மான்கள் உயிரிழந்தன

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம பிரதேசத்தில் சுற்றித் திரியும் மான்கள் சில கடந்த இரண்டு நாட்களுக்குள் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது, குறித்த மான்கள் நீர்வெறுப்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மான்களில் உடல்கள் வைத்திய ஆய்வு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் இதன்போதே உயிரிழந்த மான்களுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார மிருக வைத்திய சேவை பணிப்பாளர் வைத்தியர் எல்.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் ஹோமாகம பிரதேசத்தில் 15 மான்கள் உயிரிழிந்த்தாகவும்  இதனையடுத்தே இரண்டு மான்களின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஹோமாகம பிரதேசத்தில் நீர்வெறுப்பு நோய் இருப்பது உறுதியாகியுள்ளதால் அந்தப் பிரதேசம் மற்றும் கொழும்பிலுள்ள நாய்களுக்கு ஊசி மருந்து ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X