2025 மே 22, வியாழக்கிழமை

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் தயாசிறி

Janu   / 2025 மார்ச் 05 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின்  எம்.பி  சுகத் சில்வாவிடமும்  விசேட தேவையுடையவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.  நேர்ந்த தவறுக்கு வருந்துகிறேன் என  ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி   தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (05)  இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்    மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு மன்னிப்பு கோரிய அவர் மேலும்  பேசுகையில்,

“தேசிய மக்கள் சக்தியின்  விசேட தேவையுடையவரான எம்.பி  சுகத் சில்வா தொடர்பில்  நான் குறிப்பிட்ட விடயத்துக்கு எதிராக  சமூக வலைதளங்களில்  எனக்கு எதிராக  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுகத்  சில்வா  எனது பல்கலைக்கழக  சகோதரர். அவருடன் நான் இணக்கமாகவே செயற்பட்டுள்ளேன். விசேட தேவையுடையவர்களை அவமதிக்கவோ அல்லது மலினப்படுத்தவோ  வேண்டிய  நோக்கம்  எனக்கு கிடையாது. வெறுப்புக்களை பரப்புவதற்காக அரசாங்கம் இவரையும் பயன்படுத்திக் கொள்கிறது என்றே கூறினேன்

 இந்த கருத்து  சுகத் சில்வாவுக்கு மனவருத்தத்தையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதேபோல்  விசேட தேவையுடைய அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X