Editorial / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில
வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 08 பேர், கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ஆதியம்பலம், கோவை பகுதியில் சுற்றுலா விடுதியில் வைத்து திங்கட்கிழமை (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் இலங்கையின் குடிவரவு நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியுள்ளனர்.
ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கிலேயே தங்கிருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவியை பொலிஸார் பெற வேண்டியிருந்தது.
கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை (18) இரவு அடியம்பலம், கோவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலா ஹோட்டல் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் எதிர்வரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago