2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

​பெண்ணை கொலைச்செய்ய: ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம்; நபர் கைது

Mayu   / 2024 ஒக்டோபர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொல்ல தயாரான நபர் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் டி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபருக்கு பெண் ஒருவரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாகவும், அவருக்கு ஒரு கோடி ரூபா பணம் தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X