Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி, ஐயனார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது.
மேற்படி யுவதி கடந்த 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யுவதி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
12 minute ago
18 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
22 minute ago
32 minute ago