J.A. George / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெனிக்கே என்ற ஒரே பாடலின் மூலம் உலகளவில் பிரபலமான இலங்கை பாடகி யொஹானி டி சிவ்வா, இந்தியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் அங்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், தனது பயணத்தை நிறைவு செய்து இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
சுமார் இரண்டு வார காலப்பகுதியில் இந்தியாவில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலங்கை திரும்பிய யொஹானி, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
"நான் புதுடெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
12 சிங்கள பாடல்களின் அல்பத்தை வெளியிடுவதே எனது அடுத்த எதிர்பார்ப்பு, அல்பத்தில் இப்போது நிறைய வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள” என்று யொஹானி கூறினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், இராணுவம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விசேட வாகன அணிவகுப்பில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
57 minute ago
2 hours ago
5 hours ago
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
5 hours ago
07 Dec 2025