Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள், நீதிமன்ற உத்தரவிற்கமைய எரியூட்டி அழிக்கப்பட்டன.
திங்கட்கிழமை (27) காலை 09.00 மணியளவில், புத்தளம் - வணாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள ‘லெக்டோவத்தை’ (Lactowatta) எரியூட்டும் உலையில் வைத்து குறித்த போதைப்பொருட்கள் தகனம் செய்யப்பட்டன.
பலபிட்டி மற்றும் சிலாபம் ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய ஹெரோயின் 22 கிலோ 888 கிராம், கேரளா கஞ்சா33 கிலோ 172 கிராம், கஞ்சா 247 கிலோ 940 கிராம் ஆகிய போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.
இன்று அதிகாலை 05.00 மணியளவில் பலபிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும், காலை 07.30 மணியளவில் சிலாபம் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும் குறித்த போதைப்பொருள் பொதிகள் பலத்த பாதுகாப்புடன் எரியூட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
எம்.எச்.எம்.சியாஜ்

32 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
2 hours ago