2021 மே 06, வியாழக்கிழமை

போதையில் மிதந்த 783 சாரதிகள் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 16 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் (14) காலை 9 மணி தொடக்கம் நேற்று (15) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 534 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் 43 கார் சாரதிகளும் 180 ஓட்டோ சாரதிகளும் 2 பஸ் சாரதிகளும் 10 லொறி சாரதிகளும் ஏனைய வாகனங்களின் சாரதிகள் 14 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2844 சாரதிகளுக்கு எதிராக ஏனைய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .