Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 07 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மதீஷ பத்திரண விலகியிருக்க வேண்டும். அவர் 50 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய வீரர் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவரும் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரருமான மகேந்திர சிங் தோனி, பத்திரண குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் 15 ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை பத்திரண வீழ்த்தியிருந்தார்.
”பத்திரண சிவப்பு பந்துப் போட்டிகளில் அதிகமாக விளையாட வேண்டியவரல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவர் ஐசிசி போட்டிகளில் விளையாட வேண்டும். ஏனென்றால் அவர் பெரிதாக மாறக்கூடியவரல்ல. அவர் தொடர்ச்சியாக இந்தத் திறமையையே வெளிப்படுத்துவார். எனவே முக்கியமான நேரங்களில் நீங்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்”, என நேற்றைய பிந்தைய போட்டி வேளையில் தோனி தெரிவித்தார்.
”அவர் வலிமையாக இருப்பதையும் எல்லா ஐசிசி போட்டிகளிலும் பங்கேற்க முடியுமாய் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். பத்திரண இலங்கையின் பெரும் சொத்து. இருப்பினும் அவர் இன்னும் ஒரு இளம் வீரர். இறுதியாக 2022 இல் வரும்போது அவர் இதைவிட மெலிவாக இருந்தார். ஆனாலும் அவர் உடற்பயிற்சி மூலம் வலிமையாக இருந்தார். அவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்கு மிக நீண்ட காலம் பணியாற்றுவார் என நினைக்கிறேன்”, என தோனி தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago