2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பபா - பந்துல ஆஜராவர்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி (பபா) மற்றும் கலைஞர்  பந்துல விஜயவீர ஆகிய இருவரும், பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று வியாழக்கிழமை (29) அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கே அவ்விருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமான நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X