2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Editorial   / 2026 ஜனவரி 07 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட தரம் 6 ஆங்கில பாட தொகுதி பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சி பாராளுமன்ற குழு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர்   சஜித் பிரேமதாச தலைமையில் கூடி இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சியின் எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க   தெரிவித்தார்.

அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடும் பணி புதன்கிழமை (07) தொடங்கும் என்றும், இந்த வாரம் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கருணாதிலக்க தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .