2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

பிரபல நடிகர் ஹேமால் கைது

Janu   / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 8ஆம் திகதி ஹவ்லொக் சிட்டி (Havelock City) பகுதியில் வைத்து, சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .