J.A. George / 2021 மே 13 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீரிகம பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான 'கொஸ்கொட தாரக' உயிரிழந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபரை சம்பவ இடத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
34 வயதுடைய 'கொஸ்கொட தாரக' என்ற சந்தேக நபர் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 மனித கொலைகள் மற்றும் 21 கொள்ளை சம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago