2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

புள்ளிமான் இறைச்சியுடன் இருவர் சிக்கினர்

Janu   / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புள்ளிமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற இருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கையும் மெய்யுமாக  பிடிக்கப்பட்டுள்ளனர்.

கல்கமுவ கள பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மின்னல் வேகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, வேட்டையாடப்பட்டு துண்டு துண்டாக இறைச்சியாக்கப்பட்ட நிலையில் புள்ளிமான் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து மானின் இறைச்சி, தலை மற்றும் ஏனைய உறுப்புக்களுடன், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட அபாயகரமான ஆயுதங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .