Editorial / 2026 மார்ச் 27 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல். ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும் மட்டக்களப்பு நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், மூவரை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காந்தி பூங்காவிலிருந்து பழைய கச்சேரி (மாவட்ட செயலகம்) வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள்:
“இக்கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது”, “குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும்”.“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
"கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!", "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!", "பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கை வைக்காதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.



15 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago