2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

’பஸ் பொட்டா’ உட்பட நால்வர் படுகாயம்

Freelancer   / 2022 ஜூலை 27 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் இன்று (27) மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் போதைப் பொருள் குற்றவாளியான பஸ் பொட்டா உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணைக்காக ஆறு சந்தேக நபர்களை கம்பஹா நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற போது, வாகனத்தில் வந்த இனந்தெரியாத ஒருவர் அல்லது குழுவினரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நான்கு பேரும் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுஅனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்தார்.

மேலும், இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .