2025 மே 22, வியாழக்கிழமை

பஸ்களில் யாசகம், வியாபாரம் செய்வதற்கு தடை

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பஸ்ஸூக்குள் யாசகம் செய்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் முற்றாகத் தடை விதிக்கவுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சங்கத்தால், செவ்வாய்க்கிழமை (22)  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பஸ்ஸூக்குள் யாசகம் செய்தல் மற்றும் வியாபாரம் செய்தல் போன்றவற்றை தடை செய்யுமாறு, பொலிஸ்மா அதிபரிடம் தான் கேட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகவும் இந்த செயற்பாடு குழப்பத்தை ஏற்படுத்துவதாக பயணிகளால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் பிரகாரமே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்ணாடி, போத்தல், ஓடுகள், மின்குமிழ்கள் போன்றவற்றை உட்கொண்டு காட்டுவது பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத மாயாஜால செயற்பாடுகள் என்றும் அவற்றை பயணிகள் வெறுப்பதாகவும் அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற நடத்தைகள், சிறுவர்களிடையே ஆபத்தான அறிவற்ற செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X