2025 மே 22, வியாழக்கிழமை

“பிரபாகரன் உப்பு இனி இல்லை”

Editorial   / 2025 மே 22 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கும் யாழ்.மாவட்ட சுயேச்சை எம்.பியுமான. ராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையே, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22)  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில், தெற்கிற்கு வடக்கு உப்பு விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் குழுவுடன் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ஹந்துன்னெத்தி கூறினார்.

"வடக்கு உப்பு மற்றும் தெற்கு உப்பு என்று எந்த உப்பும் இல்லை. எங்களிடம் இலங்கையின் உப்பு உள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரனின் உப்பை சாப்பிட்டிருக்கலாம். இனி அத்தகைய உப்பு இல்லை. நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

பதிலளித்த எம்.பி. அர்ச்சுனா, வடக்கின் உப்பை தெற்கிற்கு அனுப்பக்கூடாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும், ஆனையிறவு உப்பளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமே தான் மத்தியஸ்தம் செய்ததாகவும் கூறினார்.

அமைச்சர் ஹந்துன்னெத்தி தான் பொய் சொல்லவில்லை என்றும், ஆனையிறவு உப்பள ஊழியர்கள் மற்றும் எம்.பி. அர்ச்சுனாவுடன் நடந்த கலந்துரையாடல்களின் குறிப்புகளை மேற்கோள் காட்டுவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X