Janu / 2024 ஜனவரி 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) கடுவெல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி வீதியை சேர்ந்த ஒன்பது வயதுடைய டிஸ்ன பெரேரா என்ற சிறுவனையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு வந்துள்ளதாகவும் பாட்டி துணி துவைக்கும்வரை சிறுவன் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென முதலை வந்து சிறுவனை கௌவ்விக்கொண்டு போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கடுவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த போது சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருப்பதையும் பலமுறை அந்த முதலை ஆற்றில் மேல் பரப்பிற்கு வந்து சென்றுள்ளதையும் கண்டுள்ளனர்.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago