Editorial / 2019 ஜூலை 07 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் அடிப்படைவாதிகளால் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக, தான் ஊடகங்களில் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் பின்னர், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென, பண்டாரகமையைச் சேர்ந்த அப்துல் ஹசன் பாத்திமா தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், தனது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பயமாகவிருப்பதாகவும் தம்மை பலர் அவமதிப்பதாகவும் பாத்திமா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பொதுபலசேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இவர், அட்டளுகம பள்ளிவாசலால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில், குறித்த பெண்ணிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் நான்கரை மணிநேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026