2021 மே 17, திங்கட்கிழமை

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

J.A. George   / 2021 மார்ச் 09 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் இறுதி அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளன.

இந்த இரு அறிக்கைகளும் இன்று பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .