Janu / 2024 ஒக்டோபர் 31 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 அடி ஆழமான பாறை குழிக்குள் காரொன்று விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (31) அதிகாலை ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனமடுவ தோணிகல ஒருகல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சமிந்த உபுல் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார், வழுக்கி சென்று ஆழமான பாறை குழிக்குள் விழுந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபர் விவசாயி என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .