R.Maheshwary / 2022 ஜூலை 31 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.
19 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
43 minute ago
1 hours ago