Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா தொடர்பில், பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானவையெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்தில்லை என்றார்.
இந்நிலையில், அமைச்சர் உண்மையை சொல்கிறாரா பிரதி அமைச்சர் உண்மையைச் சொல்கின்றாரா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரிடம் நேற்று (07) கேட்டுக்கொண்டனர்.
ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே.க எம்.பி எஸ்.எம்.மரிக்கார், 'இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்திருப்பதாக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண, இந்த சபையில் அறிவித்திருந்தார். அது தொடர்பான பரிசோதனைகளைச் செய்யுமாறு, நுகர்வோர் அதிகாரசபையை அறிவுறுத்தியிருந்த போதிலும், அந்த நிறுவனங்கள் முறையாகப் பரிசோதனைகளைச் செய்யவில்லை என்றும் அதனால், இது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுகின்றது" என்றார்
அதனால், 'இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில், நாட்டில் இருக்கும் 20 சதவீதமான மக்கள், பாரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்" என்றும் இந்த விடயத்தின் பாரதூரத்தைக் கருத்திற்கொண்டு, இதுதொடர்பாகத் தேடிப்பார்க்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், இந்த விடயம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சரை அறிவுறுத்துகின்றேன் என்றார்.
இதன்போது எழுந்த சுகாதார அமைச்சர், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் தொடர்பாக, சபைக்கு தெரிவித்த விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அது தொடர்பில் பூரண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன், தமது அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவினர், அதுதொடர்பான பூர்ண அறிக்கையை, தன்னிடம் சமர்ப்பித்ததாகவும் அதனைத் தான், நாடாளுமன்றத்தில் கையளிப்பதாகவும் கூறிய அமைச்சர், அதில், நியூஸிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றின்படி, பாலைத் தவிர வேறு எந்தத் திரவியங்களும், குறித்த பால்மாவில் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago