2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பிரதமரின் அழைப்பை ஏற்றார் ராகுல்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புதுடெல்லியிலிருந்து க.ஆ.கோகிலவாணி 

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, நன்றி கூறினார்.

 இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், இந்தியா காங்கிரஸின் உயர்மட்டக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு, புதுடெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில், கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்றது.  

இந்தச் சந்திப்பில் இந்திய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

இந்து சமுத்திரத்தில், சுதந்திரமான கடற் பயணத்தை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை ஆரம்பித்துள்ள செயற்றிட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. மேலும், இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு, காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆர்வமாக இருந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .