Nirosh / 2021 மே 31 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறந்தநாள் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதியளித்த கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளனர்.
நாடு முழுவதிலும் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்திமல் ஜயசிங்க மற்றும் மொடல் பியூமி ஹன்சமாலி ஆகிய இருவரும் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டலில் பிறந்தநாள் நிகழ்வொன்றை நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலில் உள்ள சி.சி.ரி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளப் பொலிஸார், பலரை அடையாளங்கண்டுள்ளதோடு, குறைந்தது 25 பேர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago