2026 மே 11, திங்கட்கிழமை

புகையிரத சேவைக்கு பாதிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 30 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனமழை காரணமாக ஹாலிஎல, உடுவர பகுதியில் புகையிரத கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் காரணமாக பதுளைக்கும் எல்லைக்கும் இடையிலான புகையிரத சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பசறை 16ஆவது மைல் கல் பகுதியில் மண்சரிவினால் முற்றாக தடைப்பட்ட பசறை - லுணுகல வீதியின் ஒரு பாதை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் சுமார் 20 வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .