2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புதுக்கூட்டு தாமதம் தொடர்பில் அகில விளக்கம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை பாதுகாக்கும் மற்றும் நாட்டை மேம்படுத்தும் பாரிய கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் பல்வேறு புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள் தொடர்பில் அனைத்து சட்சிகளுடனும் கலந்துரையாடுவது என, கொள்கை ரீதியிலான தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரையில், புதிய கூட்டணி தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை ஒத்திவைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கூட்டணியானது ஜயநாயகத்தை கட்டியெழுப்புவதை நோக்க கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பட்டுள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X