2025 ஜூலை 02, புதன்கிழமை

புதுடில்லிக்கு வடக்கேயுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பூட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸ்மிரில் காணப்படும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்றுவரும் போர்ச் சூழல் காரணமாக, ஜம்மு காஸ்மிர், பஞ்சாப் மற்றும் ஹிமாசல் பிரதேசங்களுக்கு உரித்தான 8 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, அம்ரித்சார், ஜம்மு, ஸ்ரீநகர், லே, குல்லு மனாலி, கங்க்ரா, சிம்லா மற்றும் பதன்கோட் போன்ற விமான நிலையங்களே, இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்வதற்கான விமான வலயமாக இதனைப் பயன்படுத்தும் நோக்கிலேயே, இந்த விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சுமார் 3 மாதகாலத்துக்கு இந்த விமான நிலையங்களை மூடிவிட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தொடர்ந்து நீடிக்கும் அரசியல் நிலவரங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .