Editorial / 2025 நவம்பர் 12 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பேட்
புதுடெல்லி கார் வெடி விபத்து எதிரொலியாக பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை (10) மாலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில்ராமநாதபுரம் மாவட்டத்தில்உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள்கண்டறியும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ளபுதிய ரயில் பாலத்தில் தமிழ்நாடு ரயில்வே பொலிஸார் ஆயுதம் ஏந்தி பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாம்பன் பாலம் வழியாக அந்நிய நபர்கள் யாரையும் செல்ல அனுமதிக்காமல் மீனவர்கள் பாலத்தில் அமர்ந்து மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
பாம்பன் ரயில் பாலம் வழியாக வரும் ரயில்களின் படிகளில் அமர்ந்து செல்பி எடுக்கும் பயணிகளை உள்ளே செல்லுமாறும், வெளியே நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago