Editorial / 2025 மே 06 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் புத்தளம் ரத்மல்யாய அல் காசிமி சிட்டி பகுதியில் வைத்து ஒருவர் செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், ரத்மல்யாய – அல் காசிமி சிட்டி பகுதியில்உள்ள வாக்கு சாவடிக்கு அண்மித்த பகுதியில் கட்சி ஒன்றின் ஆதரவாளர் ஒருவர் கட்சியின் சின்னம் அடங்கிய சிறிய துண்டு பிரசுரத்தை வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026