Freelancer / 2025 ஜனவரி 05 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் மாவட்டத்தில் அநுராதபுரம், ஓயாமடுவ, விளாச்சிய போன்ற பிரதேசங்களில் நெல் விவசாயிகள் மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இனந்தெரியாத புழு இனத்தினால் பல பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை சேதப்படுத்தப்பட்டமையே இதற்கு காரணமாகும்.
இந்த புழுத் தொல்லையால் நெற்பயிர்ச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினாலும் புழுக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் புழுக்களின் தொல்லையால் விளைச்சல் வேகமாக குறையும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த புழு தொல்லையை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மற்றை பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .