Freelancer / 2026 மார்ச் 30 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேற்காசிய போரால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த சவாலை நாம் திறம்பட எதிர்கொண்டு வருகிறோம். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிடம் இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இதன் மூலம் எரிபொருள் பிரச்சினையை சமாளித்து வருகிறோம். ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்றிணைந்து புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
போர் விவகாரத்தில் முற்றிலுமாக அரசியலை தவிர்க்க வேண்டும். இது 140 கோடி மக்களின் நலன் சார்ந்தது. இதில் சுயநல அரசியலுக்கு ஒருபோதும் இடம் அளிக்கக்கூடாது. தற்போதைய சூழலில் வதந்திகளை பரப்புவோர் சொந்த நாட்டுக்கே துரோகம் இழைக்கின்றனர்.
இந்திய மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். எரிபொருள் தொடர்பான (பெட்ரோல், டீசல்) வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு நிர்வாகம் அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்புங்கள், அதற்கேற்ப செயல்படுங்கள். கடந்த காலங்களில் நாம் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு உள்ளோம். 140 கோடி இந்தியர்களின் பலத்தால் இந்த சவாலிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். (a)
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago