2026 மே 14, வியாழக்கிழமை

“பெண்களின் உழைப்பே பொருளாதாரத்தின் தூண்”

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO), உலக வங்கி மற்றும் ILO-வின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற "The South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia" மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு உரையாற்றினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

"பராமரிப்பு சேவைகள் (Care Services) மீதான கவனம் குறைவதென்பது தற்செயலான ஒரு நிகழ்வல்ல. அது உலகளாவிய ரீதியில் பெண்ணிய பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். பெண்கள் ஊதியமின்றி மேற்கொண்டு வரும் இத்தகைய பராமரிப்புச் சேவைகள், ஒரு கட்டமைப்பு ரீதியான பிரச்சினையாகவும் பெண்ணியம் சார்ந்த பிரச்சினையாகவும் காணப்படுவதால், இதற்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பெண்களின் இந்த ஊதியமற்ற உழைப்பின் மீதே தங்கியிருக்கின்றது."

 எம். எச். எம். சியாஜ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .