2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’’பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை’’

Editorial   / 2023 ஜூன் 21 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரை ஆந்திராவிலுள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூத்தலப்பட்டு காவல்நிலையத்தின் பொலிஸார் கைது செய்து, துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்களும்   7 வயது பிள்ளையும் அடங்குவார்கள் என்று தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தின் மாநில தலைவர்   தெரிவித்துள்ளார்.

 ஜூன் 7, 11, 12 ஆகிய திகதிகளில் கைது செய்யப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரில் 8 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓர் இளம்பெண்ணும் ஓர் ஆணும் மட்டும் விடுவிக்கப்படவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கால்களை அகழ விரித்து, பெண்ணுறுப்பில் மிளகாய்த் தூள் தடவி இரும்புக்கம்பியினால் பெண்ணுறுப்பில் குத்தியே பொலிஸார் வன்கொடுமையை புரிந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X