Janu / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக அமைக்கப்பட்ட கொழும்பு றோயல் கல்லூரியில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பெண்ணொருவரை தள்ளிவிட்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் வெள்ளவத்தை காலி வீதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (22) அன்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, சந்தேக நபர்கள் குறித்த பெண்ணை தள்ளிவிட்டு அந்த இடத்தில் குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹெவ்லொக் வீதி, மயூரா பிளேஸ், மற்றும் வெல்லவத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 43,45 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago