Editorial / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago