Freelancer / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுக்கை - அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது,
பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இலங்கை விமானப்படையின் வீரர் என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹொரணை - தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவரே என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago