Editorial / 2026 மார்ச் 10 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்காக புதிய 'தேசியக் கொள்கை' ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச) புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகள் மற்றும் 342 நடத்துநர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தனதுரையில்…
கடந்த கால அரசியல் தலையீடுகளால் வீழ்ச்சியடைந்த இ.போ.சபையை மீண்டும் கட்டியெழுப்ப, புதிதாக இணைந்துள்ள ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களுடன் அன்பாகவும், பாதுகாப்பான முறையிலும் பழகும் புதியதொரு கலாச்சாரத்தை சபைக்குள் கொண்டுவர வேண்டும்.
தற்போதுள்ள பழைய பஸ்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, புதிய மற்றும் தரமான பஸ்கள் சேவையில் இணைக்கப்படும். இந்த மாதத்தில் ஜப்பானிடமிருந்து 08 புதிய பஸ்கள் கிடைக்கவுள்ளதுடன், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மேலதிக பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி போக்குவரத்திற்காகச் செலவிடப்படுகிறது. பொதுப் போக்குவரத்து வலுப்படுத்தப்பட்டால், தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு குறைந்து, மக்களின் பொருளாதாரச் சுமை குறையும். அத்துடன் வாகன இறக்குமதிச் செலவும், சுற்றுச்சூழல் மாசடைவும் கட்டுப்படுத்தப்படும்.
மக்களின் உயிர் சாரதி மற்றும் நடத்துநர்களின் கைகளிலேயே உள்ளது. எனவே, போதைப்பொருள் பாவனையாளர்கள் அல்லது ஒழுக்கமற்றவர்கள் பஸ்களைச் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கான சட்டங்கள் மற்றும் பரிசோதனைகள் கடுமையாக்கப்படும்.
போக்குவரத்துச் சேவையை முழுமையாகத் தனியார் துறையிடம் ஒப்படைக்க முடியாது. முறையான ஒழுங்குமுறை மற்றும் முகாமைத்துவத்துடன் கூடிய ஒரு பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியை உருவாக்குவதே அரசின் நோக்கம்.
நட்டம் ஏற்படும் கிராமப்புற வீதிகளில் தடையற்ற சேவையை வழங்குவதற்காக இந்த வரவு செலவுத்திட்டத்தில் 2,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.























2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago