2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போலி கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற 2 பெண்கள் கைது

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை முகவரிகள் கொண்ட, இந்திய கடவுச்சீட்டுடன் வந்த நிலையில், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டுமே போலியான கடவுச்சீட்டுக்கள் என்று தெரிய வந்தது. 

இதையடுத்து, கங்கா சுந்தரதாசன் (46), சொர்ணகலா சுந்தரேசன் (22) என்ற பெண்களின் பயணங்களையும், குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

பொலிஸ் விசாரணையில், இவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து, சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்து விட்டு, இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். 

அவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து போலியான இந்திய கடவுச்சீட்டுக்கள் பெற்றுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல முயன்றனர் என்று தெரிய வந்தது. 

பின்னர் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், 2 பெண்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .